லண்டன்: பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் பல கோடி மோசடி செய்து இந்தியாவை விட்டு ஓடி லண்டனில் தஞ்சமடைந்த வைர வியாபாரி நிரவ் மோடி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கான அரசியலா நீரவ் மோடி கைது என்பது பற்றி சில நாட்களுக்கு பிறகு தான் தெரியவரும்.

அமலாக் இயக்குனரகத்தின் பரிந்துரையின் பேரில் தற்போது அவரை கைது செய்ய லண்டன் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நீரவ் மோடி செய்த மோசடி என்ன?

நீரவ் மோடி செய்த மோசடிகள் எல்லாமே கோடிகளில் தான்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடி மற்றும் ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்து பஞ்சாப் நேஷனல் வங்கியையே திக்கு முக்காட வைத்தவர் தான் இவர். ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர். இந்தியாவிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பல நகைக் கடைகளுக்கு சொந்தக்காரர்.

அமெரிக்காவில் அவரது நகைக் கடையை அதிபர் டொனால்ட் டிரம்ப் திறந்து வைக்கும் அளவுக்கு அவருடன் நீரவ் மோடி நெருக்கம். டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு நெருக்கமானவர் என்ற புகழோடு வலம் வந்த நிரவ் மோடி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இது தேர்தலை மனதில் கொண்டு தானா என்பது பற்றி இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

மேலும் தகவல்கள் விரைவில்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here