சென்னை: தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் தற்போது வெளியாகிவிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதனை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் பல பகுதிகளில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது.
லோக்சபா தேர்தல் மட்டுமல்லாது சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. பெரிய கட்சிகளை மநீம, இந்திய குடியரசுக் கட்சியின் ஆதரவுடன் எதிர்கொள்ளப்போகிறது.

மநீம கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.
இந்த தேர்வில், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஒரு வாரமாக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. 40 தொகுதிக்கும், 18 இடைத்தேர்தல் தொகுதிக்கும் விருப்பமனு அளித்த 1300 பேருக்கு நேர்முக தேர்வு நடந்தது.

கமல்ஹாசன் இன்று வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் பட்டியல் இதோ… வரும் 24ம் தேதி இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

 • வட சென்னை – மவுரியா
 • மத்திய சென்னை கமீலா நாசர்
 • ஸ்ரீபெரும்புதூர் – சிவக்குமார்
 • அரக்கோணம் – ராஜேந்திரன்
 • வேலூர் – சுரேஷ்
 • கிருஷ்ணகிரி – எஸ். ஸ்ரீகாருண்யா
 • தருமபுரி – வழக்கறிஞர் ராஜசேகர்
 • விழுப்புரம் (தனி)- வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி
 • சேலம்- பிரபு மணிகண்டன்
 • நீலகிரி (தனி) – ராஜேந்திரன்
 • திண்டுக்கல் – டாக்டர் சுதாகர்
 • திருச்சி – வி. ஆனந்தராஜா
 • சிதம்பரம் (தனி)- டி.ரவி
 • மயிலாடுதுறை – ரிபாயுதீன்
 • நாகப்பட்டினம் (தனி) – குருவய்யா
 • தேனி – வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்
 • தூத்துக்குடி – பொன் குமரன்
 • திருநெல்வேலி – வென்னிமலை
 • கன்னியாகுமரி – எபனேசர்
 • புதுச்சேரி – சுப்பிரமணியம்
 • திருவள்ளூர் (தனி)- டாக்டர். லோக ரங்கன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here