திமுக வின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியானது. அதேபோல் அதிமுகவும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இரண்டு தேர்தல் அறிக்கைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்த போதிலும், அதிமுக வின் அறிக்கையில் ‘வலியுறுத்துவோம்’ என்பதே கண்ணில் பட்டது. அதைத் தான் இப்போதும் செய்கிறீர்களே என அதிமுகவை இணையத்தில் பலரும் விமர்சித்தனர்.

அதே போல் திமுகவின் அறிக்கையும் விமர்சனத்துக்கு உள்ளானது. தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை (Budget), சிறு குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு, கல்விக் கடன் தள்ளுபடி நடவடிக்கை உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

சிறு குறு விவசாயிகள் யார்?

5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் சிறு குறு விவசாயிகள் என வரையறுக்கப்பட்டிருக்கிறது.

என்ன திருத்தம்?

திமுக வின் தேர்தல் அறிக்கை அனைத்து விவசாயிகளையும் திருப்தி செய்யும் வகையில் இல்லை என்பதால், தேர்தல் அறிக்கையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி என்பது அனைத்து விவசாயிகளுக்கும் இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இது ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும், நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்” என தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது

ஆக, ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடன்களும் தள்ளுபடியாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here