சற்று முன்னர் முன்னாள் கிரிக்கெட் வீரர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக வில் இணைந்துள்ளார்.

கவுதம் கம்பீர், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் இன்று பாஜகவில் சேர்ந்தார். அப்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கவுதம் கம்பீருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

கம்பீருக்கு சமீபத்தில் தான் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.


பாஜகவில் இணைந்த பின்னர், கம்பீர் அளித்த பேட்டியில், “பிரதமர் மோடியின் செயல்பாடுகள், நிர்வாகம் மற்றும் திட்டங்களால் நான் வெகுவாக ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைந்தேன். நாட்டை முன்னேற்ற சிறப்பாக பணியாற்றுவேன்.” எனத் தெரிவித்தார்.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் பாஜக வின் அருண் ஜெட்லிக்கு ஆதரவாக கம்பீர் பிரசாரம் செய்தார். மோடி அலை அதிகமாக வீசிய போதே, கம்பீரின் பிரச்சாரமும் கைகொடுக்காமல் அருண் ஜெட்லீ தோற்றுப் போனது குறிப்பிடத்தக்கது.

கவுதம் கம்பீர், தேசப் பற்று தொடர்பாகவும், ராணுவ வீரர்கள், சமூக பிரச்சினைகளிலும் அக்கறையுடன் கருத்துக்களை தெரிவித்து வந்தவர். அப்போதே அவர் பாஜகவில் இணைவார் என்று கணிக்கப்பட்டது. சமீபத்தில் புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து கருத்து கூறிய கம்பீர், பாகிஸ்தானுடன் போர் புரிய வேண்டும் என்று கூறி அதிர வைத்தார். உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்றும், 2 புள்ளிகள் போனால் போகட்டும் என்றும் ஆவேசமாக கருத்து கூறினார்.

ஆனால், கம்பீருடன் விளையாடிய அதிரடி வீரரான வீரேந்திர சேவாக் பாஜகவின் அழைப்பை புறக்கணித்து விட்டார் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் உட்பட 25 பேர் பாஜக வில் இருந்து விலகிய செய்தி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here