எத்தனை கட்டுக்கோப்பாக கட்சி இருந்தாலும், தேர்தல் நேரத்தில் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. வடகிழக்கு மாநிலங்களில் 2 அமைச்சர்கள் உட்பட 18 பாஜக தலைவர்கள், 6 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 25 பாஜக தலைவர்கள் ஒரே வாரத்தில் அக்கட்சியிலிருந்து விலகி உள்ளனர். அதிலும் அமைச்சர்கள் மற்றும் MLA க்கள் கட்சியை விட்டு விலகிவிட்டதால் அங்கு பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

விலகியதற்கு முக்கிய காரணம் இதுதான்

அருணாச்சல பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, மக்களவைத் தேர்தலுடன் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருந்த நிலையில் பாஜக, அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதில் பல சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கும், 2 அமைச்சர்களுக்கும் சீட் வழங்கவில்லை. இதனால் உட்கட்சி பூசல் பெரிதாகி, 6 எம்.எல்.ஏக்கள், 2 அமைச்சர்கள் பாஜகவில் இருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் வட கிழக்கு மாநிலங்களில் 25 பாஜக தலைவர்கள் விலகி அங்குள்ள பல்வேறு மாநிலக் கட்சிகளில் இணைந்துள்ளனர்.

இது தொடர்பாக பாஜகவிலிருந்து விலகிய அமைச்சர் குமார் வாயீ, காங்கிரஸ் வாரிசு அரசியலை மேற்கொள்வதாக குற்றம்சாட்டி வரும் பாஜக, அருணாச்சல பிரதேசத்தில் பாஜக முதலமைச்சரின் குடும்பத்திற்கு 3 சீட்களை வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பாஜக தலைவர்கள் பலர் விலகி அங்குள்ள மாநிலக் கட்சிகளில் இணைந்து வருவதால் அம்மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவு நிச்சயம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *