தேர்தல்களில் பல வித்தியாசமான வேட்பாளர்களை மக்கள் சந்தித்திருக்கின்றனர். இந்த தேர்தலிலும் அப்படி சிலர் உள்ளனர். அவர்களை பற்றிய பகுதியில் முதலாவது தான் இது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம்… அவர் ஆண்களுக்கு 10 லிட்டர் பிராந்தி இலவசம் என்று கூறியது தான்.

திருப்பூர் மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் சேக் தாவுத்(55). இவர் திருப்பூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். வேட்பு மனுதாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சேக் தாவூத் அளித்த வாக்குறுதிகள் சில…

  • குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை
  • ஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் பிராந்தி.
  • ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆணுக்கும் சுத்தமான 10 லிட்டர் பிராந்தி பாண்டிச்சேரியில் இருந்து நேரடியாக வரவழைத்து வழங்க ஏற்பாடு செய்வேன். (கவனிங்க… சுத்தமான பிராந்தி)
  • தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கூடாது என டெல்லி சென்று போராடுவேன்.
  • பெண்களுக்கு திருமணத்திற்கு 10 பவுன் நகை, 10 லட்சம் பணம் எனது M.P நிதியிலிருந்து வழங்குவேன்
  • மேட்டூர் அணை நீரை அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வழியாக வாய்க்கால் வெட்டி நேராக திருப்பூருக்கே கொண்டு வருவேன்.

அப்போது அவர், பிராந்தியை மருந்துக்காக பலர் சாப்பிடுவதால் இந்த வாக்குறுதியை இணைத்துள்ளதாக கூறினார்.

இது போன்று பல வாக்குறுதிகளை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் மனிதர். கலகலப்பு பட பாணியில் பைப்பை திறந்தால் பிராந்தி வரும் என்று சொல்லாமல் விட்டாரே என அதிர்ந்து ஓட்டமெடுத்தனர் நிருபர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here