ஆண்களுக்கு மாதம் 10 லிட்டர் பிராந்தி இலவசம் என்று கூறி அதிர வைத்த வேட்பாளர்…

தேர்தல்களில் பல வித்தியாசமான வேட்பாளர்களை மக்கள் சந்தித்திருக்கின்றனர். இந்த தேர்தலிலும் அப்படி சிலர் உள்ளனர். அவர்களை பற்றிய பகுதியில் முதலாவது தான் இது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம்… அவர் ஆண்களுக்கு 10 லிட்டர் பிராந்தி இலவசம் என்று கூறியது தான். திருப்பூர் மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் சேக் தாவுத்(55). இவர் திருப்பூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். வேட்பு மனுதாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சேக் […]

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜகவில் இணைந்தார்: புதுடெல்லி தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்…

சற்று முன்னர் முன்னாள் கிரிக்கெட் வீரர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக வில் இணைந்துள்ளார். கவுதம் கம்பீர், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் இன்று பாஜகவில் சேர்ந்தார். அப்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கவுதம் கம்பீருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். கம்பீருக்கு சமீபத்தில் தான் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பாஜகவில் இணைந்த பின்னர், கம்பீர் அளித்த பேட்டியில், […]

சீமான் வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம். தேர்தலில் வெற்றியை பெற்றுத்தருமா?

நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தங்களது கட்சியின் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தினார். அந்த புதிய சின்னம் விவசாயி.  இதனை தொடர்ந்து சீமான், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், சரணடைந்து வாழ்வதை விட, சண்டையிட்டு சாவதே மேல் என்ற கொள்கையை கொண்டதால் தான், கூட்டணியை புறக்கணித்து தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக கூறினார். நாம் தமிழர் கட்சி 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்து […]

நிரவ் மோடி கைது – லண்டன் தெருக்களில் ஊர் சுற்றிய போது பிடிபட்டார்… #NiravModi

லண்டன்: பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் பல கோடி மோசடி செய்து இந்தியாவை விட்டு ஓடி லண்டனில் தஞ்சமடைந்த வைர வியாபாரி நிரவ் மோடி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கான அரசியலா நீரவ் மோடி கைது என்பது பற்றி சில நாட்களுக்கு பிறகு தான் தெரியவரும். அமலாக் இயக்குனரகத்தின் பரிந்துரையின் பேரில் தற்போது அவரை கைது செய்ய லண்டன் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நீரவ் மோடி செய்த மோசடி […]

ஒரே வாரத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட 25 தலைவர்கள் பாஜகவிலிருந்து விலகல்… என்ன ஆனது கட்சிக்கு?

எத்தனை கட்டுக்கோப்பாக கட்சி இருந்தாலும், தேர்தல் நேரத்தில் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. வடகிழக்கு மாநிலங்களில் 2 அமைச்சர்கள் உட்பட 18 பாஜக தலைவர்கள், 6 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 25 பாஜக தலைவர்கள் ஒரே வாரத்தில் அக்கட்சியிலிருந்து விலகி உள்ளனர். அதிலும் அமைச்சர்கள் மற்றும் MLA க்கள் கட்சியை விட்டு விலகிவிட்டதால் அங்கு பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். விலகியதற்கு முக்கிய காரணம் இதுதான் அருணாச்சல பிரதேசத்தில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி […]

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் கமல் வெளியிட்டார்!

சென்னை: தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் தற்போது வெளியாகிவிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதனை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் பல பகுதிகளில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்க உள்ளது. லோக்சபா தேர்தல் மட்டுமல்லாது சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் […]

குடிமக்கள் உயிரைக் காக்கவே மதுவிலக்கு கொண்டு வரவில்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. ஆட்சிக்கு வந்தவுடன் நெடுஞ்சாலைகளில் இருந்த சில மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அவர் மறைவுக்கு பிறகு, அதிமுக அரசு மதுக்கடைகளை மூடியதா என்றால் இல்லை என்பது தான் பதில். இன்று ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,“திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது. அப்படி திடீரென்று குடியை […]

திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் – அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி

திமுக வின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியானது. அதேபோல் அதிமுகவும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இரண்டு தேர்தல் அறிக்கைகளும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்த போதிலும், அதிமுக வின் அறிக்கையில் ‘வலியுறுத்துவோம்’ என்பதே கண்ணில் பட்டது. அதைத் தான் இப்போதும் செய்கிறீர்களே என அதிமுகவை இணையத்தில் பலரும் விமர்சித்தனர். அதே போல் திமுகவின் அறிக்கையும் விமர்சனத்துக்கு உள்ளானது. தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை (Budget), சிறு குறு […]